காஜல் அகர்வால் திடீர் ஆதங்கம்

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர், காஜல் அகர்வால். கடந்த 2020ல் கவுதம் கிட்ச்லு என்ற மும்பை தொழிலதிபரை காதல் திருமணம் செய்துகொண்டு, நீல் கிட்ச்லு என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். திருமணத்துக்கு பிறகு மும்பையிலுள்ள சொந்த வீட்டில் கணவர் மற்றும் மகனுடன் குடியேறியுள்ள அவர், சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ‘ராமாயணா: பார்ட் 1’ என்ற பான்வேர்ல்ட் படத்தில், மண்டோதரி வேடத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ அம் கேம்’ என்ற படத்திலும் மற்றும் ‘தி இந்தியா ஸ்டோரி’ என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் வங்கதேசத்தில் இந்து இளைஞர் திபு சந்திர தாஸ் என்ற இளைஞர் தீயிட்டு கொல்லப்பட்டார். இதற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. அந்த வகையில் காஜல் அகர்வால் தனது சோஷியல் மீடியாவில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் ஆதங்கத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், தீ வைத்து எரிக்கப்பட்ட ஒரு மனிதனின் உடலை கொண்ட போஸ்டரை பதிவிட்டு, ‘வங்கதேச இந்துக்கள் மீது அனைவருடைய பார்வையும் இருக்கிறது. இந்துக்களே விழித்தெழுங்கள். அமைதியாக இருப்பது உங்களை ஒருபோதும் காப்பாற்றாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: