அரசியல் பின்னணியில் ஐபிஎல்

சென்னை: இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் மணிமாறன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கருணாகரன் இயக்கும் முதல் படம் ‘ஐபிஎல்’ (இந்தியன் பீனல் லா – இந்திய தண்டனை சட்டம்). ஜி.ஆர். மதன் கிருஷ்ணன், ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் பேனரில் தயாரிக்கிறார். பரபரப்பான அரசியல் பின்னணியில் கிரைம் திரில்லராக உருவாகும் இப்படத்தில் ‘ஆடுகளம்’ கிஷோர், டிடிஎஃப் வாசன், அபிராமி, குஷிதா, சிங்கம்புலி, ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேரடி, போஸ் வெங்கட் மற்றும் திலீபன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படம் குறித்து பேசிய இயக்குநர் கருணாகரன், ‘நாட்டில் நடைபெறும் திடுக்கிடும் சில குற்றங்களை நாம் செய்தித்தாள்களில் படித்து விட்டு சில தினங்களில் மறந்து விடுகிறோம். ஆனால் அந்த சம்பவங்களில் சிலவற்றின் பின்னால் வெளியில் தெரியாத அரசியல் காரணங்கள் உள்ளன. அதனால் சாதாரண அப்பாவி மனிதர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்யாத தவறுக்காக ஒரு குடும்பம் எப்படி அரசியல் சூழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து வெளியில் வருவதற்காக என்ன செய்கிறார்கள், அவர்களால் வெளியில் வர முடிந்ததா என்பதே ‘ஐபிஎல்’ படத்தின் கரு’ என்று தெரிவித்தார்.

Related Stories: