திட்டமிட்டு அவதூறு பரப்புவதா?: ஜோதிகா ஆவேசம்

சென்னை: சூர்யா நடித்த ’கங்குவா’ படம் கடந்த 14ம் தேதி திரைக்கு வந்தது. முதல் காட்சி முடிந்தவுடன் சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் பரவ ஆரம்பித்தது. இதுகுறித்து ஜோதிகா ஆவேசத்துடன் கூறியதாவது:‘கங்குவா’ படம், சினிமா வில் ஒரு வியக்க வைக்கும் சாதனை. முதல் அரை மணி நேரம் சரியாக இல்லை என்பதையும், சத்தம் அதிகம் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஊடகங்களிலும், சில சமூக வலைத்தளங்களிலும் இருந்து வரும் எதிர்மறை விமர்சனங்கள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன.

ஏனெனில், முன்பு பார்த்த மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் பழைய கதைகளுடன் பெண்களை துரத்துவது, இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் பேசுவது, மிகையான ஆக்‌ஷன் காட்சிகள் போன்றவற்றுக்கு இந்த அளவிலான விமர்சனங்கள் யாரும் செய்யவில்லை. ‘கங்குவா’ படத்தின் முதல் நாள், முதல் காட்சி முடிவதற்கு முன்பே இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இப்படம் தகுதியான ஒரு படமாக இருந்தபோதும், ஒரு குழுவாக திட்டமிட்டு எதிர்மறை விமர்சனங்கள் பரப்புவது ஏனென்று தெரியவில்லை.

 

Related Stories: