டிஏஜிங் தொழில் நுட்பத்தில் உருவாகும் படம்: மீண்டும் இணைந்த மம்மூட்டி மோகன்லால்

திருவனந்தபுரம்: கடந்த 2008ல் ரிலீசான ‘ட்வென்டி: 20’ என்ற மலையாளப் படத்தில் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்தனர். நடிகர் திலீப் தயாரித்த இப்படத்தில் சுரேஷ் கோபி, ஜெயராம் உள்பட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தனித்தனியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில், 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர்கள் இணைந்து நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நடிக்க மம்மூட்டி 100 நாட்கள் வரையும், மோகன்லால் 30 நாட்களும் கால்ஷீட் கொடுத்துள்ளனர்.

‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ போன்ற படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இப்படத்தை இயக்குகிறார். முக்கிய ரோலில் குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. குஞ்சாக்கோ போபன் கூறும் போது, ‘இதுவரை மலையாளப் படவுலகம் கண்டிராத வகையில் ஒரு படம் உருவாகிறது’ என்றார். பிளாஷ்பேக் காட்சிக்காக டிஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்ற படத்தில் பயன்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: