சீனாவில் வெளியாகிறது மகாராஜா

சென்னை: சீனாவில் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆவது அரிதான விஷயம். இந்நிலையில் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படம், சீனாவில் திரைக்கு வர உள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான ’மகாராஜா’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது என்பதும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 55 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.

அது மட்டும் இன்றி ஓடிடியில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அதில் ரூ.150 கோடி வருவாய் பார்த்தது. தற்போது அடுத்த கட்டமாக இந்த படம் சீனாவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’மகாராஜா’ திரைப்படம் நவம்பர் 29ம் தேதி சீனாவில் அந்த மொழியில் டப் செய்து வெளியாக உள்ள நிலையில் இது குறித்த அதிகாரபூர்வ போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான் வாங்கி உள்ளதாகவும் அவர் விஜய் சேதுபதியின் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, அபிராமி, திவ்யபாரதி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

Related Stories: