16 மொழிகளில் உருவாகும் விமலின் 35வது படம்

சென்னை: யூபோரியா பிளிக்ஸ் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நடிக்கும் 35வது படம், ‘பெல்லடோனா’. இது சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக 16 மொழிகளில் உருவாக்கப்படுகிறது. ஹீரோயின்களாக தேஜஸ்வினி சர்மா, மணிப்பூரைச் சேர்ந்த மேக்சினா பவ்னம் நடிக்கின்றனர். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, ஏசி ஜான் பீட்டர் இசை அமைக்கிறார்.

தீபக் எடிட்டிங் செய்ய, சந்தோஷ் பாபு முத்துசாமி பாடல்கள் எழுதுகிறார். டேஞ்சர் மணி சண்டைக் காட்சிகள் வடிவமைக்கிறார். இயக்குனர் கூறுகையில், ‘இது விமலின் திரைப்பயணத்தில் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். வித்தியாசமான மேக்கிங்குடன் படம் உருவாக்கப்படுகிறது’ என்றார்.

 

Related Stories: