ஒருவரை ஒருவர் பிடிக்காதவர்களின் காதல் கதை

சென்னை: சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் ஜோடியுடன் ஜெயப்பிரகாஷ், பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், மாறன், சஷ்டிகா நடித்துள்ள படம், ‘மிஸ் யூ’. இதை 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ளார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். என்.ராஜசேகர் இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறியதாவது:

‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நான் இயக்கியுள்ள படம், ‘மிஸ் யூ’. இளைஞன் ஒருவன் தன் எண்ணங்களுக்கு சரிப்பட்டு வராத, மனசுக்குப் பிடிக்காத ஒரு பெண்ணை தீவிரமாகக் காதலிக்கிறான். தன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லும் அவன், பிறகு ஏன் தன்னைக் காதலிக்கிறான் என்று காதலி கேட்கிறாள். இந்தக் கேள்விக்குப் பின்னால் மறைந்திருக்கும் சுவாரஸ்யமான பதில்தான் இப்படம். ஒருவரை ஒருவர் பிடிக்காதவர்களின் காதல் கதை இது.

இன்றைய தலைமுறை இளைஞர்களின் காதலை ரொமான்ஸ் காமெடி ஜானரில் சொல்லியிருக்கிறேன். ‘களத்தில் சந்திப்போம்’ படத்துக்கும், ‘பேப்பர் ராக்கெட்’ வெப்ெதாடருக்கும் வசனம் எழுதியிருந்த அசோக், ‘மிஸ் யூ’ படத்தின் வசனத்தை எழுதியுள்ளார். மேலும், என்னுடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் 29ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

Related Stories: