அதிவேகமாகக் சென்ற பேருந்து பிரேக் போட்டதால் சாலையில் விழுந்த குழந்தை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முத்துராமலிங்க புரத்தை சேர்ந்தவர் மதன்குமார். அவரது தனது சகோதரி 2 வயது 1 வயது குழந்தை அழைத்துக்கொண்டு தனியார் பேருந்தில் முன்பக்க படிக்கெட்டில் அருகாமையில் உள்ள சீட்டில் அமர்ந்து வந்துகொண்டிருந்தர்.

மீனாட்சிபுரம் விளக்கு அருகே வந்துகொண்டிருந்த போது ஓட்டுநர் திடிர் என பிரேக் பிடித்து உள்ளார். அப்போது சடனாக பேருந்து நின்றதால் மதன்குமார் கையில் இருந்த 2 வயது குழந்தை உடன் கிழே விழுந்த நிலையில் அவரது சகோதரின் கையில் இருந்த 1 வயது குழந்தை தவறி முன்பக்கப்படிவழியாக சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிஷ்டவசமாக மதன்குமார் பலத்த காயம் அடைந்த நிலையில் இரு குழந்தைகளும் காயத்துடன் உயிர்தப்பிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

 

The post அதிவேகமாகக் சென்ற பேருந்து பிரேக் போட்டதால் சாலையில் விழுந்த குழந்தை appeared first on Dinakaran.

Related Stories: