மேற்கு மண்டல பகுதிகளில் மேயர் ஆய்வு சேதம் அடைந்த மழைநீர் வடிகால்களை விரைவாக சீரமைக்க உத்தரவு

 

கோவை, ஜூன் 14: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மேயர் ரங்கநாயகி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். 45வது வார்டுக்கு உட்பட்ட அன்னை சத்யா நகர் பகுதியில் புதிதாக சமுதாய நலக்கூடம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

சாயிபாபாகாலனி, என்.எஸ்.ஆர் ரோடு பகுதியில் உடைந்து நொறுங்கி கிடக்கும் மழைநீர் வடிகாலை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், காமராஜர் வீதி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கும் சேதம் அடைந்து கிடக்கும் மழைநீர் வடிகால்களை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்.

இதன்பிறகு, சாயிபாபாகாலனி கே.கே.புதூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிதாக திட்டப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, உதவி கமிஷனர் துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி நகரமைப்பு அலுவலர் மகேந்திரன், உதவி பொறியாளர் ஹரிபிரசாத், கவுன்சிலர் பேபிசுதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post மேற்கு மண்டல பகுதிகளில் மேயர் ஆய்வு சேதம் அடைந்த மழைநீர் வடிகால்களை விரைவாக சீரமைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: