கோவை, ஜூலை 23: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வீரபத்திரன் தலைமை வகித்தார். இதில், மாநில பொருளாளர் ஆனந்தவல்லி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முன்னாள் மாநில பொருளாளர் வெங்கடேசன், இன்னாசி முத்து, மனோரஞ்சிதம் உள்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது, அவர்கள் ஓய்வூதியம் ரூ.6750-ஐ அகவிலைப்படி உடன் வழங்க வேண்டும். நீதிபதி பட்டு தேவானந்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஓய்வூதியர்கள் ஒப்பாரி போராட்டம் appeared first on Dinakaran.
