மதுக்கரை அருகே மின்சாரம் தாக்கி தனியார் பள்ளி மாணவர் பரிதாப பலி

 

மதுக்கரை, ஜூலை 21: மதுக்கரை அருகே மின்சாரம் தாக்கி தனியார் பள்ளி மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம், மதுக்கரை அருகே அறிவொளி நகர் பகுதியில் உள்ள சமத்துவ நகரில் வசித்து வரும் மதன்குமார் என்பவரின் மகன் நந்தகுமார் (17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், வீட்டின் ஜன்னல் ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் விழுந்த தனது ஸ்வெட்டரை வீடு துடைக்கும் மாப்பு குச்சியை ஜன்னல் வழியாக விட்டு எடுத்துள்ளார்.

அப்போது எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மதுக்கரை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர் உடலை கைப்பற்றி, பிரேத பிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மதுக்கரை அருகே மின்சாரம் தாக்கி தனியார் பள்ளி மாணவர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: