மாவோயிஸ்ட் நடமாட்டம்: வனப்பகுதியில் ரகசிய சோதனை

கோவை, ஜூலை 20: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் மாவோஸ்ட் நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. செக்போஸ்ட், வன எல்லைப்பகுதி ரோடு, வனப்பகுதி கிராமங்கள் (ஷெட்டில்மெண்ட்) போன்றவற்றில் போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணி நடத்தி வருகின்றனர். 4 மாவட்டங்களில் சுமார் 600 வன கிராமங்கள் இருப்பதாக தெரிகிறது. மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் காட்டிற்குள் தேன், திணை, வன பொருட்கள் சேகரிக்க சென்று வருகின்றனர்.

இவர்களுக்கு வனத்தின் பல்வேறு பகுதிகள், புதிய நபர்கள் குறித்த விவரங்கள் தெரிந்திருப்பதாக கூறப்படுகிறது. மாவோயிஸ்ட்கள், புதிய நபர்கள் காட்டிற்குள் வந்து சென்றார்களா?, எதாவது இடங்களில் பதுங்கி இருக்கிறார்களா? என போலீசார் கிராம மக்களிடம் கேட்டு வருகின்றனர். தேடப்படும் சில மாவோயிஸ்ட்களின் போட்டோ காட்டி அடையாளம் தெரிந்தால் தகவல் அளிக்க உதவி கேட்டுள்ளனர். மாநில எல்லை செக்போஸ்ட்களில் சந்தேக நபர்கள் நடமாட்டம் கேட்டறிந்து வருகின்றனர்.

கேரள மாநிலத்தின் தண்டர் போல்ட் போலீசார் தமிழக எல்லை பகுதி வரையில் கண்காணிப்பு பணி நடத்தி வருகின்றனர். சில ஆண்டிற்கு முன் அட்டபாடியில் துப்பாக்கி சூட்டில் தப்பிய மாவோயிஸ்ட் ஆனைகட்டியில் சிக்கினார். இதில் ஒருவர் தப்பினார். கோவையை சேர்ந்த 3 பேர் கேரளாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் மற்றும் இவர்களின் கூட்டாளிகள் மாநில எல்லை கடந்து கோவை, நீலகிரி வனப்பகுதியில் புகுந்து விட்டதா என கண்டறியும் பணியும் நடக்கிறது.

The post மாவோயிஸ்ட் நடமாட்டம்: வனப்பகுதியில் ரகசிய சோதனை appeared first on Dinakaran.

Related Stories: