கோவை, ஜூலை 22: சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இறகுப்பந்து போட்டி ஜெர்மன் நாட்டில் உள்ள ரைன் ரூர் என்ற இடத்தில் நடைபெற்றது.
இதில், உலகில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கோவை பாரதியார் பல்கலை.,க்கு உட்பட்ட ஒரு தனியார் கல்லூரி மாணவர் சதீஷ்குமார் மற்றும் மாணவி ஸ்ரீவர்சினி ஆகியோர் பங்கேற்று, இறகுப்பந்து போட்டியில், இந்தியா அணி சார்பாக விளையாடி, சர்வதேச அளவில் மூன்றாம் இடம் பிடித்தனர். இவர்களுக்கு, பாரதியார் பல்கலை.,யின் பதிவாளர் ரூபாகுணசீலன், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குனர் அண்ணாதுரை உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
The post இறகுப்பந்து போட்டி சர்வதேச அளவில் கோவை மாணவர்கள் 3ம் இடம் appeared first on Dinakaran.
