கொடிசியாவில் புத்தகத் திருவிழா

 

கோவை, ஜூலை 25: கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் புத்தகத் திருவிழா நடக்கிறது. இதில் நாள்தோறும் கவியரங்கம், சொல்லரங்கம், படைப்பரங்கம், பட்டிமன்றம், நாடகம் போன்றவை நடத்தப்படுகிறது. நேற்று அறிவுக்கேணி அமைப்பு சார்பாக தொழில்நுட்பத்தால் உறவுகள் வளர்கிறதா, தளர்கிறதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

தொடர்ந்து, ரோட்டரி கிளப் ஆப் சேஞ்ச் மேக்கர்ஸ் அமைப்பு பழங்குடி மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி, மரபின் மைந்தன் முத்தையா தலைமையில், கவியரசு கண்ணதாசன் திரைப்பாடல்கள் வெற்றி பெறப் பெரிதும் காரணம் கதையோடு கரைவதே தனியாக தெரிவதே என்ற பொருண்மையில் இன்னிசை பட்டிமண்டபம் நடைபெற்றது. இதில் கொடிசியா புத்தகத் திருவிழா தலைவர் ராஜேஷ், துணைத்தலைவர் முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. கவிஞர் கவிதாசன் தலைமையில் புத்தம் புது சிந்தனை மலரட்டும் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் பயிற்சி வகுப்பும் நடைபெறும். டாக்டர் சிவராமன் சன்னலோரப் பயணங்கள் -சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற தலைப்பில் பேசவுள்ளார். வரும் 27ம் தேதி வரை வாசகர்கள் புத்தக விழாவை பார்வையிடலாம், அனுமதி இலவசம்.

The post கொடிசியாவில் புத்தகத் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: