கோவை, ஜூலை 21: உலகம் முழுவதும் தினமும் ஏற்படுத்தி வரும் மாசு காரணமாக 2100ம் ஆண்டுக்குப் பிறகு, பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் போகலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். மாசு இல்லாத இந்தியாவையும், உலகத்தையும் உருவாக்கும் உறுதியான நடவடிக்கையில் மேக் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், மனு நீதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான மாணிக்கம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணிக்கம் மற்றும் பொது மேலாளர் ரமேஷ் ராஜகோபால் கூறுகையில், கழிவுநீர், தொழிற்சாலை கழிவுகள், திடக்கழிவுகள், புகை வெளியேற்றம் அல்லது துர்நாற்றம் வீசும் குப்பைகள் என அனைத்து மாசுபாடுகளுக்கும் காப்புரிமை பெற்ற தீர்வு எங்களிடம் உள்ளது. இந்த தொழில்நுட்பங்கள் முன்னணி இந்திய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளன. அவை ஆற்றல் திறன் கொண்டவை, இதற்கு ரசாயனங்கள் தேவையில்லை, மேலும் இதை குறைந்த கட்டணத்தில் செயல்படுத்த முடியும். மேலும் இது அப்துல் கலாமின் தொலைநோக்கு பார்வை.
இந்தியாவின் 60 சதவீத நீர்நிலைகள் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை வெளியேற்றத்தால் மாசுபட்டுள்ளன. அதேபோல் திடக்கழிவை பொறுத்தவரை குப்பை கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. இதை கையாள்வது என்பது மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது. உப்பு மற்றும் கரிம பொருட்கள் காரணமாக ஜவுளி மற்றும் தோல் தொழில்கள் அதிக சுத்திகரிப்பு செலவுகளை எதிர்கொள்கின்றன. இவை அனைத்திற்கும் ஒரே தீர்வை நாங்கள் வழங்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post கழிவுநீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரை மாசு கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு appeared first on Dinakaran.
