காரமடை அரங்கநாதர் கோயிலில் ஆடி மாத கிருஷ்ணபட்ச ஏகாதசி உற்சவ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

 

காரமடை, ஜூலை 22: காரமடை அரங்கநாதர் கோயிலில் ஆடி மாத கிருஷ்ணபட்ச ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீஅரங்கநாதர் பெருமாள் காட்சியளித்தார். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோயில் இருந்து வருகிறது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் மாசி மக தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இதேபோல் வைகுண்ட ஏகாதசி உற்சவம், புரட்டாசி சனிக்கிழமைகள், ஏகாதசி உற்சவங்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நேற்று ஆடி மாத கிருஷ்ணபட்ச ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர், கால சந்தி பூஜை முடிந்து விஷ்வக்ஷேனர் பூஜை, புண்யாவசனம், கலச ஆவாகனம் நடைபெற்றது.

The post காரமடை அரங்கநாதர் கோயிலில் ஆடி மாத கிருஷ்ணபட்ச ஏகாதசி உற்சவ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: