தொட்டியம், ஜூன் 14: திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து தொட்டியம் செல்லும் சாலையில் உள்ள பைபாஸ் ரோட்டில் சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள புதர்களையும் முள் செடிகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் நெடுஞ்சாலை துறைக்கு கோ ரிக்கை விடுத்துள்ளனர். முசிறி – குளித்தலை பாலம் அமைந்துள்ள பகுதியில் அருகே இருந்து நாமக்கல் வரை புதிய தார் சாலை தமிழக அரசு பெரும் பொருட் செலவில் அமைத்துள்ளது.
சில இடங்களில் நான்கு வழி சாலையாகவும் சில இடங்களில் இரு வழிச்சாலையாகவும் அமைக்கப்பட்டுள்ளது.சாலை அமைக்கப்பட்டு நாட்கள் கடந்து நிலையில் சாலை ஓரத்தில் முசிறியில் இருந்து தொட்டியம் செல்லும் பகுதியில் சாலை ஓரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள வெள்ளைக்கோடு வரை முள், புதர்களும் செடிகளும் வளர்ந்துள்ளது.
இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் வரும் வாகனங்களுக்கு ஒதுங்கி செல்ல சிரமப்படுகின்றனர்.இச்சாலையில் வாகனங்கள் அதிகம் செல்லும் நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அவர்களுக்குரிய சாலையில் அச்சமின்றி பயணிக்கவும், விபத்துகளில் சிக்காமல் இருக்கவும், நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சாலை ஓரத்தில் உள்ள முள் புதர்களையும் செடிகளையும் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.
The post முசிறி – நாமக்கல் சாலையோர முள் புதர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.