திருச்சி, ஜூன் 13: திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோர்களுக்கு சிலிண்டா் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு துறையூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன மேலாளா்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளா்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகா்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், வருவாய் தாசில்தார் அலுவலகத்தில் ஜூன் 21ம் தேதி அன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் துறையூர் வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகா்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகா்வோர்கள், அங்கீகாிக்கப்பட்ட தன்னார்வ நுகா்வோர் அமைப்புகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடா்பான குறைபாடுகளை தெரிவித்து பயன்பெறலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
The post வரும் 21ம்தேதி நுகர்வோர் எரிவாயு குறைதீர் முகாம் appeared first on Dinakaran.