மதுரை: சித்திரை திருவிழா தொடங்க உள்ள நிலையில் அழகர்கோவிலில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மதுரை சரக டிஐஜி ஆய்வு மேற்கொண்டார். உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோவில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற மே 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அழகர்கோவிலில் இருந்து 10ம் தேதி தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி அழகர் புறப்படுகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகர்கோவிலுக்கு வருகை தருவர்.
இதை முன்னிட்டு மதுரை சரக காவல்துறை துணை தலைவர் பிரனவ் குமார் அபினவ், அழகர்கோவிலில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பக்தர்கள் வந்து செல்லும் வழி, பேரிகார்டு அமைக்கும் இடம், பார்க்கிங் அமைவிடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மதுரை எஸ்பி அரவிந்த், ஊமச்சிகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், சாந்தி பாலாஜி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகேசன், ஒத்தக்கடை போக்குவரத்து காவலர்கள், கோயில் தனிப்பிரிவு தலைமை காவலர் கார்த்திக், கோயில் கண்காணிப்பாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் உள் வளாகத்தில் 6 கண்காணிப்பு ேகாபுரங்கள், 150 கேமராக்கள், ட்ரோன் மற்றும் ரோலிங் கேமரா உள்ளிட்டவை பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள்: அழகர்கோவிலில் டிஐஜி ஆய்வு appeared first on Dinakaran.