அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பயில விண்ணப்பிக்கலாம்

 

அவிநாசி,மே26: அவிநாசியில் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கு www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் மாணவர் சேர்க்கை குறித்து கல்லுாரியில் உள்ள சேர்க்கை உதவி மையத்தை பெற்றோர்கள் அணுகி, 8 இளம் நிலை பாடப் பிரிவுகள் உள்ள விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.பி.ஏ., (ஆங்கிலம்), பி.ஏ., (பொருளாதாரம்), பி.காம்., பி.காம்., (சர்வதேச வணிகவியல்), பி.காம்., (வணிக நிர்வாகவியல்) பி.எஸ்.சி., (வேதியியல்), பி.எஸ்.சி., (கணினிஅறிவியல்), பி.சி.ஏ., (கணினி பயன்பாட்டியல்) உள்ளிட்ட 8 இளம் நிலை பாடப்பிரிவுகள் உள்ளது. வரும் மே. 27ம் தேதியன்று முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையத்தில் விண்ணப்பிக்க இறுதிநாள் என கல்லுாரி முதல்வர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.

 

The post அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பயில விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: