பெரம்பலூர் மே 17: பெரம்பலூர் மாவட்டத்தின் பெருமைமிகு அடையாளமாக திகழும் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகத் திகழ்வது கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகும். மாநகராட்சியாக தரம் உயரவுள்ள பெரம்பலூரின் மையப்பகுதியில் மாநிலத்தின் எந்த பகுதியிலிருந்து வந்து கல்வி பயிலவும் ஏற்ற போக்குவரத்து வசதியுடன், கல்விக்கு நிகராக, மாணவ, மாணவியரின் உடல் திறன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக் கூடிய, மாவட்டத்தின் வேறு எந்த பள்ளிகளிலும் இல்லாத அளவிற்கு அதிநவீன வகுப்பறைகளைக் கொண்ட, சிறந்த முதுகலை, பட்டதாரி ஆசிரியர்களை, உடற்கல்வி ஆசிரியர்களைக் கொண்ட பள்ளியாக திகழ்வதால் படிப்பிலும் விளையாட்டிலும் இப்பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் அளப்பரிய சாதனைகளை படைத்து வருகின்றனர்.
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி கனிஷ்கா 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவிகள் மதிமலர் மற்றும் பிரார்த்தனா ஆகிய இருவரும் 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடத்தையும், மாணவி தான்யா பர்ஹின் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். கணிதத்தில் ஒருவர், அறிவியலில் 5 பேர்கள், சமூக அறிவியலில் 4 பேர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 30 மாணவ, மாணவியர் 450க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப்பள்ளியின் சராசரி சதவீதம் 84 ஆகும். பிளஸ் 2 பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10 மாணவ மாணவியர் 600க்கு 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் ரவிச்சந்திரன், செயலாளர் அங்கையர்கண்ணி, துணைத் தலைவர் ஹரிஷ் ரவிச் சந்திரன், பள்ளி முதல்வர் பிரதீப் ஆகியோர் இனிப்புகள் வழங்கி, பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர். மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற அர்ப்பணிப்புத் திறனுடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் சார்பில் தாளாளர் ரவிச்சந்திரன் இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.
The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி appeared first on Dinakaran.