ஆரணி அருகே பட்டா கத்தியுடன் ‘ரீல்ஸ்’ எடுத்த வாலிபர் கைது

ஆரணி, ஏப்.29: ஆரணி அருகே பட்டா கத்தியுடன் ரீல்ஸ் எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆரணி அடுத்த நெசல் சாலையில் ஒரு வாலிபர் நேற்று முன்தினம் பட்டா கத்தியுடன் நின்றபடி, செல்போனில் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் அருண்குமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர்.

ஆனால் அவர் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து ‘ரீல்ஸ்’ எடுத்தபடி இருந்தார். இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது, நெசல் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த நேம்குமார்(20) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து நேம்குமாரை கைது செய்தனர். பின்னர், அவரை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஆரணி அருகே பட்டா கத்தியுடன் ‘ரீல்ஸ்’ எடுத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: