கெங்கவல்லி, ஏப்.27: கெங்கவல்லி அருகே கூடமலை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், எஸ்ஐ கணேஷ்குமார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சௌந்தர்யா தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடை உரிமையாளர் பெரியம்மாள் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
The post மளிகை கடையில் புகையிலை விற்றவர் கைது appeared first on Dinakaran.