விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி ஒருவர் போக்சோ சம்பந்தமாக 3 பேர் மீது புகார் அளித்திருந்தார். இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி தாய், சிறுவன் உள்பட 3 பேரை இவ்வழக்கில் கைது செய்தனர்.
இதனிடையே சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்ததாக அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கூட்டு பலாத்காரம் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் விசாரணைக்கு அழைத்த வாலிபர்கள் சிலரை விடுவிக்க அவர்களிடம் ரூ.20 ஆயிரம் வரை இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி லஞ்சம் வாங்கி உள்ளார். இந்நிலையில், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
The post போக்சோ வழக்கில் பெயர் சேர்க்காமல் இருக்க லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட் appeared first on Dinakaran.