சென்னை: சட்டப் பேரவையில் நேற்று வணிக வரிகள், முத்திரைத் தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு. போக்குவரத்து துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு சங்ககிரி சுந்தரராஜன்(அதிமுக) பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கேள்விகளுக்கு அமைச்சர் மூர்த்தி தொடர்ந்து பதிலளித்தார். கேள்வி கேட்பதும், அமைச்சர் பதில் சொல்வதுமாக இருந்தது.
இந்த நேரத்தில் அமைச்சர் துரைமுருகன் எழுந்து, ‘‘நீங்கள் சாப்பிட்டு விட்டு வந்துவிட்டீர்கள். நாங்கள் எவ்வளவு நேரம், மூன்று மணி வரையிலுமா உட்கார முடியும். இரண்டு பேரும் இப்படியே டயலாக் பேசிக் கொண்டிருந்தால் எப்படி. சீக்கிரம் முடியுங்கள்’’ என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
The post டயலாக் பேசிக் கொண்டிருந்தால் எப்ப முடிக்கிறது?.. அமைச்சர் பேச்சால் சிரிப்பலை appeared first on Dinakaran.