ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜவுளி நிறுவனங்களிலும், கட்டுமான பணிகளிலும் வேலை செய்து வந்த இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் தங்கியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.