பொன்னேரி: தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து, பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை சந்திப்பு, பேருந்து பணிமனை உட்பட பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடி கம்பங்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புடன் கொடிக்கம்பங்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக என கட்சி பாகுபாடின்றி அரசியல் கட்சி, சமூக அமைப்புகள் என அனைத்து விதமான கொடிக்கம்பங்களையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். பொக்லைன் இயந்திரம் மூலம் அரசியல் கட்சி கொடி கம்பங்களை கழற்றி எடுத்து, கல்வெட்டுகள் ஆகியவற்றை இடித்து அகற்றும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
The post பொன்னேரி நகராட்சியில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.