மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை விழாவையொட்டி தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தின் முன்பு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினர். கம்பத்தடி மண்டபத்தில் மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடைக்கு தீபாராதனை நடந்தது. மீனாட்சி சுந்தரேசுவரர் காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதியில் வலம் வருவார்
The post மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.