ஆண்டு விழா கொண்டாட்டம்

சேலம், ஏப்.24: சேலம் அன்னபூரணா பொறியியல் கல்லூரியின்(தன்னாட்சி) ஆண்டு விழா திறந்த வெளி அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிர்வாகக்குழு தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். கல்லூரியின் டிரஸ்டி அருணாதேவி சந்திரசேகர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மதுரையைச் சேர்ந்த பாடலாசிரியர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து முதல்வர் முனைவர் அன்புச்செழியன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பல்கலைக்கழக தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மேலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்ட பேராசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடிவில் மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் வெங்கடேஷ் வரவேற்று பேசினார்.

The post ஆண்டு விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: