₹5.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

இடைப்பாடி, ஏப்.27: இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில், நேற்று கூடிய சந்தைக்கு சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 10,250 ஆடுகளை கொண்டு வந்தனர். தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்தனர். இடைப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தெவம் வழிபாடு நடந்து வருவதால், ஆடுகள் விற்பனை சூடுபிடித்தது. 10 கிலோ முதல் 30 கிலோ எடை வரையுள்ள ஆடு ₹5,800 முதல் ₹27,000 வரை விலை போனது. வளர்ப்பு குட்டி ஆடு ₹2,500 முதல் ₹3,000 வரை விற்கப்பட்டது. ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இவை தவிர பந்தய சேவல், கோழிகள், காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தது. நேற்றைய சந்தையில் ₹5.50 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ₹5.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: