சேலம், ஏப்.27: சேலம் அன்னதானப்பட்டி சங்ககிரி மெயின்ரோட்டில், கிருஷ்ணகுமார்(51) என்பவர் புதியதாக கட்டிடம் ஒன்றை கட்டி வந்தார். இதில் தர்மபுரி அதியமான்கோட்டை போடியூரைச் சேர்ந்த முருகன்(50) என்பவர் வேலை செய்துவந்தார். கட்டிட வேலை முடிந்த நிலையிலும், அங்கேயே தங்கிருந்த முருகன், வேறு இடங்களுக்கு கொத்தனார் வேலைக்கு சென்றாலும், அதே இடத்தில் வந்து தங்கிக்கொள்வார். நேற்று முன்தினம் இரவு, மாடியில் படுத்து தூக்கிய முருகன், எதிர்பாராத வகையில் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், அன்னதானபட்டி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில் முருகன் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
The post மாடியில் இருந்து விழுந்த கொத்தனார் பலி appeared first on Dinakaran.