26 சதவீத பரஸ்பர வரிவிதிப்புக்கு இடையே குடும்பத்தினருடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்..!!

டெல்லி: 4 நாள் பயணமாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்தடைந்தார். AF2 விமானம் மூலம் வந்தடைந்த அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனது மனைவி உஷா, 3 குழந்தைகளுடன் வருகை தந்தார். டெல்லி வந்தடைந்த ஜே.டி.வான்ஸுக்கு இந்தியா சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜே.டி.வான்ஸை ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜே.டி.வான்ஸ் ஏற்றார்.

இந்தியா வந்த ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் அக்சர்தாம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த உள்ளார். டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை ஜே.டி.வான்ஸ் சந்தித்து பேசுகிறார். இருதரப்பு வர்த்தகம், வரி, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சு நடத்த உள்ளனர். ஜே.டி.வான்ஸ், அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார். இந்திய பொருட்கள் மீது டிரம்ப் கூடுதலாக விதித்த வரியை 90 நாளுக்கு நிறுத்தி வைத்துள்ளார். இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்த பேச்சு நடத்தும் நிலையில் வான்ஸ் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

The post 26 சதவீத பரஸ்பர வரிவிதிப்புக்கு இடையே குடும்பத்தினருடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: