நடிகர் தனுஷ் படப்பிடிப்பில் தீ: 2 மணி நேரம் போராடி அணைத்தனர்


ஆண்டிபட்டி: நடிகர் தனுஷ் தயாரித்து இயக்கி நடிக்கும் படம் இட்லி கடை. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அனுப்பப்பட்டி கிராமத்தில் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இதற்காக ஒரு தெரு போன்ற செட் அமைக்கப்பட்டிருந்தது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் நேற்று இரவு திடீரென தீப்பற்றியது.

மரம் மற்றும் பிளைவுட்டால் ஆன செட் என்பதால் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post நடிகர் தனுஷ் படப்பிடிப்பில் தீ: 2 மணி நேரம் போராடி அணைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: