கோபி,ஏப்.28: கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் லாரி மற்றும் ஜெனரேட்டர் பேட்டரி திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சத்தியமங்கலத்தை சேர்ந்த ராஜாமணி என்பவரது தார் பிளாண்ட் கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் உள்ளது. இந்நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள நிலையில் நிறுவனத்திற்கு சொந்தமான லாரிகள், ஜெனரேட்டர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்குள் கடந்த மார்ச் 27ம் தேதி புகுந்த மூன்று பேர் லாரிகள் மற்றும் ஜெனரேட்டரில் இருந்த பேட்டரிகளை திருடிச் சென்றபோது, நிறுவன ஊழியர்கள் விரட்டி சென்று இருவரை பிடித்து பங்களாபுதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிய புளியம்பட்டி அருகே உள்ள பனையம்பள்ளியை சேர்ந்த முருகன் மகன் கருப்புசாமி (23) தப்பியோடினார். இதைத்தொடர்ந்து தலைமறைவான கருப்புசாமியை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று வீட்டில் பதுங்கி இருந்த கருப்புசாமியை பங்களாபுதூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post லாரி பேட்டரி திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.