மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த 308 மனுக்கள்

ஈரோடு, ஏப்.29: ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் 308 மனுக்கள் வரப்பெற்றன. ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கும் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் ராஜகோல் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி, காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தந்து 308 மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும், தமிழக முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள், கடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், கலால் உதவி ஆணையர் தியாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நூர்ஜகான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, துணை ஆட்சியர்(பயிற்சி) சிவபிரகாசம் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த 308 மனுக்கள் appeared first on Dinakaran.

Related Stories: