இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குமரி அனந்தன் உயிரிழந்தார். குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது; திரு குமரி அனந்தன் அவர்கள், மதிப்புமிகு சமூக சேவைக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆர்வத்திற்காகவும் நினைவுகூரப்படுவார். தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பிரபலப்படுத்துவதற்காகவும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது மறைவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி. எனக் குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்! appeared first on Dinakaran.