உள்ளாட்சி அமைப்புகளில் 500 பேருக்கு நாய்களைப் பிடிப்பதற்கான பயிற்சி வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்கப்படும். கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, ஊனமுற்ற நாய்களுக்கு 72 காப்பகங்கள் அமைக்கப்படும். ஊனமுற்ற நாய்களுக்கு 72 காப்பகங்கள் அமைப்பதற்கான இடம் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும்.
தொண்டு நிறுவனங்கள் காப்பகங்களை பராமரிக்கும் பணியை செய்யும்; இதற்கு நிதி ஒதுக்கப்படும். விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை வசதி இல்லாத பகுதிகளில் கூடுதலாக மையங்கள் அமைக்கப்படும். அறுவை சிகிச்சை மையங்களுடன் இணைந்து கால்நடை மருத்துவ வசதிகளுடன் நாய் காப்பகங்கள் அமைக்கப்படும். உள்ளாட்சி அமைப்பில் உள்ளூர் கண்காணிப்பு குழு அமைத்து நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு பணி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை மாநகராட்சியில் புதிதாக 10 நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள்! appeared first on Dinakaran.