மஹிரா கான், ஹனியா ஆமிர், சனம் சயீத் மற்றும் அலி ஜாபர் ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டது. மேலும் பிலால் அப்பாஸ், இக்ரா அஜீஸ், அயேசா கான், இம்ரான் அப்பாஸ் மற்றும் சஜஸ் அலி ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் தடுக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.பாபர் அசாம், ஷஹீன் அஃப்ரிடி, முகமது ரிஸ்வான், சதாப் கான், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், அப்துல்லா ஷஃபீக் உள்ளிட்ட வீரர்கள் பலரது இன்ஸ்டா கணக்குகள் தடை செய்யப்பட்டன. இவர்களின் இன்ஸ்டா கணக்குகளை இந்திய பயனர்கள் அணுக முயற்சிக்கும்போது, இந்தியாவில் இந்த கணக்கு கிடைக்கவில்லை. சட்டபூர்வ கோரிக்கைக்கு நாங்கள் இணங்கியதால் இது நடந்தது என்ற செய்தி காட்டப்பட்டுள்ளது.
The post பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் தடை appeared first on Dinakaran.