ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஆடுகள் விற்பனை அமோகம்!

ரம்ஜான் பண்டிகைக்கு 2 நாட்கள் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கால்நடைகள் சந்தையில் ஆடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. ரம்ஜான் பண்டிகை வருகிற 31-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கால்நடை சந்தைகளில் ஆடுகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியுர் சந்தையில் அதிகாலை முதல்லே ஆடுகள் விற்பனை கலைக்கட்டிருந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வெள்ளை ஆடு, செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளார்.

ஆடு ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.6000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. 2 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் கால்நடை சந்தையில் மதுரை, தேனி, விருதுநகர் பகுதிகளில் இருந்து சுமார் 5000 ஆடுகள் குவிக்கப்பட்டன. இருப்பினும் இந்த ஆண்டு ஆடுகளுக்கு விவசாயிகள் அதிக விலையை நிர்ணயித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சுமார் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி பெரம்பலூர், கிருஷ்ணகிரி, வள்ளியூர், திருமங்கலம், செஞ்சி, புதுக்கோட்டை, வேப்பூர் ஆகிய ஆட்டுச் சந்தைகளில் இன்று ஆடுகள் விற்பனை அமோகம் நடைபெற்று வருகிறது. பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாக விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளார். குறிப்பாக கிருஷ்ணகிரி சந்தையில் இன்று மட்டும் சுமார் ரூ.10 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

The post ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஆடுகள் விற்பனை அமோகம்! appeared first on Dinakaran.

Related Stories: