குன்னூர் வெலிங்டன் அருகே ரயில்வே குடியிருப்புக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு

 

குன்னூர், மார்ச் 25 : குன்னூர் வெலிங்டன் அருகே ரயில்வே குடியிருப்புக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி செல்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிறப்பு வாய்ந்த மலை ரயில் நிலையம் உள்ளது. அங்கு சுமார் 70 க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் ரயில் நிலையத்திற்கு அருகே குடியிருப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதிக்கான குடிநீர் வினியோகம் அருவங்காடு பகுதியில் இருந்து குன்னூர் ரயில் நிலையம் வரை செல்கிறது. ஆனால் இந்த குடிநீர் குழாயில் வெலிங்டன் அருகே ரயில் பாதையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பல நாட்களாக குடிநீர் வீணாகிறது. எனவே உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயை, சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குன்னூர் வெலிங்டன் அருகே ரயில்வே குடியிருப்புக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: