குப்பைகளை தெருவில் வீசியவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

 

கோவை, மார்ச் 25: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 42வது வார்டுக்கு உட்பட்ட தவசி நகர் பகுதி அருகே அமைந்துள்ள சந்தைப்பேட்டையில், குப்பைகளை தெருவில் வீசுவதாக மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனுக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின்பேரில், மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளர் வீரன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது, குப்பைகளை தெருவில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சந்தைப்பேட்டை உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர், குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் நேரில் வழங்குவது பற்றியும், பொது இடத்தில் தேங்கும் குப்பைகளை, யாருக்கும் தீங்கு ஏற்படாத வகையில் தீ வைத்து எரிப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post குப்பைகளை தெருவில் வீசியவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: