மதுரை, மார்ச் 25: கார் பராமரிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, அது தொடர்பான அடிப்படை பயிற்சிகள் மதுரை ஐடிஐயில் வழங்கப்பட உள்ளன. மதுரை, கோ.புதூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை, குறுகிய கால பயிற்சி மையமாக மாநில அரசு அங்கீகரித்துள்ளது. அதனை தொடர்ந்து, இங்குள்ள தொழில்நுட்ப மையத்தில் 16 மணி நேர கார் பராமரிப்பு குறித்த அடிப்படை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இதில், கார் உரிமையாளர்கள் மற்றும் கார் பராமரிப்பில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வீதம் 4 நாட்கள் இப்பயிற்சி வழங்கப்படும் பயிற்சிக்கு கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கார் உரிமையாளர்கள், ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் கார் பராமரிப்பில் ஆர்வமுள்ள அனைவரும் இந்த பயிற்சியில் சேரலாம்.
இதில் இணைய விரும்புவோர் மதுரை கோ.புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநரை தொடர்பு ெகாள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 99943 08611, 78671 50534 என்ற செல்போன் எண்களில் அழைக்கலாம். இத்தகவலை தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
The post மதுரை ஐடிஐயில் கார் பராமரிப்பு அடிப்படை பயிற்சி appeared first on Dinakaran.