ஊட்டி, மார்ச் 25: ஊட்டி நகரில் உள்ள பெரும்பாலான வேகத் தடைகளில் வர்ணம் பூசப்படாத நிலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். அதேபோல், ஏராளமான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக கிாமப்புறங்களில் இருந்தும் வந்துச் செல்கின்றனர். இந்நிலையில் ஊட்டி நகரில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பல்வேறு சாலைகளிலும் வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கேசினோ சந்திப்பு பகுதியில் இருந்து டிபிஓ பகுதிக்கு செல்லும் சாலையில் பிரிக்ஸ் பள்ளி முன்புறம் இரண்டு இடங்களில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத் தடைகளுக்கு வர்ணங்கள் பூசப்படாத நிலையில், வாகனங்களில் செல்பவர்களுக்கு வேகத் தடை உள்ளது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்த வேகத் தடைகளில் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே, இந்த வேகத் தடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் வர்ணங்கள் பூசி விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post வர்ணம் பூசாத வேகத்தடைகளால் விபத்து அபாயம் தொடர்கிறது appeared first on Dinakaran.