கோவை, மார்ச் 25: கோவை மாநகராட்சி 2025-2026ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் வரும் 28ம்தேதி மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடக்கிறது. இதையொட்டி, பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில், வரும் நிதியாண்டுக்கான புதிய வரி விதிப்பு மற்றும் புதிய திட்டங்கள் குறித்து கலந்துஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர்கள் குமரேசன், சுல்தானா, மண்டல தலைவர்கள் மீனா லோகு (சென்ட்ரல்), இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (கிழக்கு), தெய்வானை (மேற்கு), தனலட்சுமி (தெற்கு), கதிர்வேல் (வடக்கு), மாநகராட்சி நிதிக்குழு தலைவர் முபசீரா, சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன், கல்விக்குழு தலைவர் மாலதி, பணிக்குழு தலைவர் சாந்தி முருகன், கணக்கு குழு தலைவர் தீபா இளங்கோ, மாமன்ற ஆளும்கட்சி குழு தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
The post மாநகராட்சி பட்ஜெட் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.