100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

நத்தம், மார்ச் 23: நத்தத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. வந்திருந்த அனைவரையும் மாவட்ட திட்ட அலுவலர் பூங்கொடி வரவேற்றார். நத்தம் வட்டார பகுதியை சேர்ந்த 100 கர்ப்பிணிகளுக்கு சேலை, வளையல், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை வளைகாப்பு சீதனப் பொருட்களை திமுக மாவட்ட பொருளாளர் விஜயன், முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலம், ஒன்றிய செயலாளர்கள் ரத்னகுமார், பழனிச்சாமி, பேரூராட்சித் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

முன்னதாக வட்டார மருத்துவ அலுவலர் மாலா மற்றும் டாக்டர்கள் கா்ப்பிணிகளுக்கு சத்தான உணவு, இரும்புச் சத்து மாத்திரை உள்கொள்வதன்அவசியம் குறித்து ஆலோசனை வழங்கினர். இதில் அவைத்தலைவர் சரவணன், கவுன்சிலர்கள் வசந்த சுஜாதா, லதா, மாரிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனர்.

The post 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: