திண்டுக்கல், மார்ச் 23: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட செயற்குழு மற்றும் வட்டக் கிளை தேர்தல் பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜோதி முருகன் தலைமை வகித்தார். செயலாளர் கருணாகரன் வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர்கள் வேல்முருகன், மணிகண்டன் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில், மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட செயற்குழுவில் அறிமுகப்படுத்துதல், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள வட்டக் கிளை நிர்வாகிளுக்கு மாவட்ட செயற்குழு பாராட்டு, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது. உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.
The post மாவட்ட செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.