திருவாரூரில் தமிழ்மொழி ஆய்வு கருத்தரங்கம்

 

திருவாரூர், மார்ச். 13: திருவாரூரில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் தமிழ்மொழி ஆய்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த்துறை சார்பில் தற்கால தமிழ் ஆய்வு போக்குகள் என்ற தலைப்பில் 3 நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று துவங்கியது. இதனை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் திருமுருகன் துவக்கி வைத்தார்.

இதில் சீனாவின் தலைநகரமான ஏன்பெய்ஜிங்கை தலைமையகமாக கொண்ட அயல்மொழி ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஷோஷின் இணையதளம் மூலம் கலந்து கொண்டார். இதில் மத்திய பல்கலைகழகத்தின் தமிழ் துறையின் புல முதன்மை பேராசிரியர் ரவி, பேராசிரியர்கள் தேவநாயகம், வேல்முருகன் மற்றும் உதவி பேராசிரியர்கள் சுபாஷ், குமார், ரமேஷ், ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post திருவாரூரில் தமிழ்மொழி ஆய்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: