புதுக்கோட்டை, மார்ச்.14: புதுக்கோட்டை திமுக சார்பில், தொகுதி சீரமைப்பை என்ற பெயரில் தமிழ்நாடு அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் ஒன்றிய அரசின் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடுவெல்லும் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் ஒன்றிய மோடி அரசின் அநீதியை கண்டித்து மாபெரும் கண்டனபொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் செல்லலப்பாண்டியன் தலைமை வகித்து பேசினார்.
தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட பேச்சாளர் வழக்கறிஞர் செந்தமிழ்செல்வன் கண்டன உரையாற்றினார். முன்னதாக பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அனைவரும் எழுந்து நின்று கையை உயர்த்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்வில் புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா உள்ளிட்ட மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றனர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன கூட்டம் appeared first on Dinakaran.