திருக்காட்டுப்பள்ளி அருகே குட்கா, மதுபாட்டில் விற்றவர் கைது: போலீசார் நடவடிக்கை

 

திருக்காட்டுப்பள்ளி மார் 14: திருக்காட்டுப்பள்ளி அருகே அரசு அனுமதியின்றி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபான பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் மெயின் ரோட்டில் கடை வைத்துள்ள கலியபெருமாள் மகன் ஆனந்தகுமார்(32) என்பவர் தனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்து இருப்பதாக திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு வந்த தகவலைய தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா மற்றும் போலீசார் அவரது கடைக்கு சென்று ஆய்வு சோதனை செய்தனர். அப்போது கடைக்குள் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா 19 பாக்கெட், வி1 பாக்கு 19, ஹான்ஸ் 19 பாக்கெட்டுகள் இருந்துள்ளது. அவரது பைக்கில் 13 மது பாட்டில்களும் இருந்துள்ளன. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்ததோடு, ஆனந்தகுமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

The post திருக்காட்டுப்பள்ளி அருகே குட்கா, மதுபாட்டில் விற்றவர் கைது: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: