செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், ஊரக வளர்ச்சி கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் ஆகியோர் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவில் செங்கல்பட்டு நகர திமுக செயலாளர் நரேந்திரன். நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், நகர மன்ற துணைத் தலைவர் அன்புச்செல்வன், மறைமலை நகர் செயலாளரும் நகர மன்ற தலைவருமான ஜெ. சண்முகம. காட்டாங்குளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் ஆப்பூர் சந்தானம், காட்டாங்குளத்தூர் ஒன்றிய பெருந்தலைவரும் திமுக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளருமான உதயா கருணாகரன்.
நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம் .கே .டி .கார்த்திக், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளரும் சிங்கப்பெருமாள் கோயில் ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான கே.பி. ராஜன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் த.வினோத்குமார், ஆலப்பாக்கம் ஊராட்சி வனக்குழு தலைவரும், ஒன்றிய திமுக அவைத்தலைவருமான வி.ஜி. திருமலை, ஒன்றிய கவுன்சிலர் நந்திமதி திருமலை, ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா ஜெய்சங்கர், ஆப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் என். குமாரசாமி, துணைத்தலைவர் கேசவன், வீராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் எம், டில்லி, ஒன்றிய கவுன்சிலர் மோகனா ஜீவானந்தம், மேலமையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹெலன் சிந்தியா சரவணன் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் நகர மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் நடந்த ‘‘ரோடு ஷோ’’ மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக நேற்று காலை வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கொத்திமங்கலம் கூட்ரோடு பகுதியிலிருந்து திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் வரை சாலையின் இருபுறமும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் நின்று முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். வழியில் திடீரென லேசான சாரல் மழை பெய்தது, அதையும் பொருட்படுத்தாமல் முதல்வர் தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்.
கொத்திமங்கலம் கிருத்துவ ஆலயம் சார்பில், பாதிரியார் சாம்சன் ராஜா முதல்வருக்கு மாலை அணிவித்து, சால்வை போர்த்தினார். முன்னதாக, முதல்வருக்கு திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் வீ.தமிழ்மணி மற்றும் பேரூர் செயலாளர் ஜி.டி.யுவராஜ், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் எல்.இதயவர்மன் திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு, துணை சேர்மன் எஸ்.ஏ.பச்சையப்பன் ஆகியோர் தலைமையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தவறான சிகிச்சையால் கண் பார்வை இழந்த நிவேதா என்ற இளம்பெண் தனக்கு கண் பார்வை கிடைக்க உரிய சிகிச்சைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தனது பெற்றோருடன் வந்து முதல்வரிடம் மனு அளித்தார்.
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திருப்போரூர் தொகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். மக்கள் சந்திப்பு முடிந்து முதல்வர் செங்கல்பட்டுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிற்கு செல்லும் வழியில், கீரப்பாக்கம் என்ற இடத்தில் இயங்கி வருகின்ற பிளெஸ்ஸிங் என்ற தனியார் பள்ளி மாணவிகள், ரோஜாப் பூவுடன் சாலையோரத்தில் வரிசையாக நிற்பதைப்பார்த்த முதல்வர் உடனே வாகனத்தை நிறுத்தச்சொல்லி இறங்கி சாலையை கடந்து சென்று மாணவிகளிடம் ரோஜாப்பூக்களை பெற்றுக்கொண்டு சென்றார்.
The post செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.